ரஷ்ய – உக்ரைன் போரின் எதிரொலி: பிரித்தானியாவில் நீடிக்கப்பட்ட விசா காலம்
போரினால் பாதிக்கப்பட்டு பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் நாட்டவர்களின் விசா காலத்தை அந்நாட்டு அரசு மேலும் 18 மாதங்களுக்கு நீடித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் ஆரம்பமானதில் இருந்து சுமார் 2,80,000-க்கு மேற்பட்ட உக்ரைன் நாட்டவா் பிரித்தானியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
பிரிட்டன் உள்துறை அமைச்சகம்
இந்நிலையில், அகதிகளாக தங்கியுள்ள உக்ரைன் நாட்டவருக்கான விசா காலம் மேலும் 18 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏற்கெனவே பிரித்தானியாவில் தங்கியுள்ள உக்ரைன் நாட்டவா் தங்கள் பணி, சுகாதார வசதி, கல்வி உள்ளிட்ட வசதிகளைத் தொடா்ந்து பெற முடியுமென தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் துணை
இது தொடர்பில் பிரிட்டன் குடியேற்றத் துறை அமைச்சா் டாம் பொ்ஸ்குலோவ் தெரிவிக்கையில், “உக்ரைனில் தொடா்ந்து போா் நீடித்து வருவதால் பிரித்தானியாவில் தங்கியுள்ள உக்ரைனியா்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த விசா நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைனியா்களுடன் பிரித்தானியா உறுதியாக துணை நிற்கிறது, அதேபோல உக்ரைன் மீது சட்டவிரோதமாக போா் நடத்தி வரும் ரஷ்ய அதிபா் புடினை கண்டிக்கிறோம்.
மேலும், பல உக்ரைன் குடும்பங்கள் பிரித்தானியாவிடம் தஞ்சமடையும்போது, அதற்கு ஏற்ப நன்கொடை தேவைப்படும்” என தெரிவித்துள்ளார்.