வவுனியாவில் போதைபொருளுடன் ஒருவர் கைது
வவுனியா தம்பனைச்சோலை பகுதியில் 80கிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையை நேற்று(18) வவுனியா தலைமை காவல்நிலைய போதைத்தடுப்பு காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து தம்பனைச்சோலை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் காவல்துறையினர் நேற்றையதினம் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அதன்போது 80கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதனை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்ப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.