;
Athirady Tamil News

A9 வீதியில் கவனம் ஈர்த்த குப்பை தொட்டிகள்!

0

A9 வீதியில் மாங்குளத்திற்கும் முருகண்டிக்கும் இடையில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்களை போடுவதற்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இடம் வீதியால் செல்லும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

“காடுகள் குப்பைகள் போடும் இடமல்ல…”எனும் வாசகம் பொருந்திய பதாதைகள் எழுதப்பட்டு குப்பைகளை போடுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

குப்பைகள் போட பிரத்யேக இடம்
இந்த குப்பை போடும் “உலகச் சிறுவர் நலன் காப்பகம்”எனும் அமைப்பினால் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பிளாஸ்டிக் கழுவுகளை கண்ட இடங்களில் வீசி செல்வதால் சுற்றுசூழலுக்கு அது7 மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாது கண்ட இடங்களில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்களை மக்கள் வீசி செல்வதால் அவ்ற்றினை உண்ணும் மிருகங்களும் உயிரிழக்கும் அபாயங்கள் காணப்படுகின்றது.

எனவே அவ் வீதியால் பயணிக்கும் நாமும் கண்ட இடங்களில் குப்பைகளை வீசாது அதற்கென அமைக்கப்பட்டுள்ள பகுதியில் அவற்ரினை போடுவதன் மூலம் அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்கலாமே என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.