;
Athirady Tamil News

விஸ்வமடுவில் படையினருக்கு கிடைத்த தொடர் ஏமாற்றம்!

0

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஸ்வமடு குமாரசாமிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் றெட்பானா சந்திக்கு அருகில் உள்ள காணியில் விடுதலைப்புகளின் தங்கத்தை தேடும் நடவடிக்கையில் படையினருக்கு இரண்டாவது நாளாக இன்றும் ஏமாற்ற்மே கிடைத்துள்ளது.

இரண்டாவது நாளாக ஏமாற்றம்
றெட்பானா சந்திக்கு அருகில் அரைக்கும் ஆலை அமைந்துள்ள கட்டிடத்திற்குள்ளும், அந்த காணிக்குள்ளும் விடுதலைப்புலிகள் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இரண்டாவது நாளாக இன்றும் (20) தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் எதுவும் கிடைக்காத நிலையில் அகழ்வு பணிகள் நிறைவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

விஸ்வமடுவில் படையினருக்கு கிடைத்த தொடர் ஏமாற்றம்! | Disappointments Soldiers In Viswamadu Ltte Gold

குறித்த காணியில் ஏற்கனவே சிலர் சட்டவிரோதமான முறையில் தோண்ட முற்பட்டு தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த காணியில் பரல் கணக்கில் விடுதலைப்புலிகள் தங்கத்தினை புதைத்து வைத்துள்ளதாக நம்பத்தகுத்த நபர் ஒருவர் தெரிவித்த கருத்திற்கு அமைய தர்மபுரம் பொலிசாரால் புதையை எடுக்க நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டது.

இதனையடுத்து புதையலை தேடி தோண்டும் நடவடிக்கைகள் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும் எதுவும் கிடைக்காத நிலையில் அகழ்ந்த இடங்களை மூட பணிக்கப்பட்டுள்ளது.

அரைக்கும் ஆலையின் கட்டடத்திற்குள் ஒருபகுதி சுமார் 6 அடிக்கு மேல் தோண்டப்பட்ட போதும் எதுவும் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாது காணியின் பின்பக்கத்தில் இரு இடங்களில் கனரக இயந்திரம் கொண்டு நிலத்தில் சுமார் 10 அடிவரை தோண்டப்பட்ட போதும் எதுவும் காணாத நிலையில் குறித்த பகுதிகளை மூட பணிக்கப்பட்டுள்ளது.

இந்த தோண்டும் நடவடிக்கைக்காக காணியினை சுற்றி பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.