இதுதான் முதல்முறை.. ராஜ்யசபா எம்பியானார் சோனியா காந்தி!
ராஜ்யசபா எம்.பி.யாக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தி
உத்திரபிரதேசம், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி தொடர்ந்து நான்கு முறை (2004,2009,2014,2019) வெற்றிமாலை சூடி 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்த தொகுதியில் எம்.பியாக உள்ளார்.
நடப்பாண்டின் மக்களவை தேர்தலில் உடல் நலக்குறைவால் அவர் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்திருந்தார். இதனையடுத்து, கடந்த வாரம் மாநிலங்களவை எம்.பி.க்காக மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ராஜ்யசபா எம்.பி
சோனியா காந்திக்கு எதிராக யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. அதனை தொடர்ந்து, சோனியா காந்தி ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வானதாக ராஜஸ்தான் மாநில சட்டசபை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
6 முறை மக்களவை எம்பியாக இருந்த அவர் முதல் முறையாக மாநிலங்களவை எம்பியாக தேர்வாகியுள்ளார். மேலும் பாஜகவின் சன்னிலால் கிராசியா, மதன் ரத்தோர் ஆகியோரும் போட்டியின்றி ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வாகி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.