;
Athirady Tamil News

கடும் பொருளாதார நெருக்கடியில் மாலைதீவு: உதவ முன்வராத சீனா

0

மாலைதீவு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், துருக்கி மற்றும் சீனா ஆகிய நாடுகள் உதவ முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் அண்டை நாடாக மாலைதீவு உள்ளது. தீவு தேசமான இந்த நாட்டின் வருமானம் என்பது சுற்றுலாத்துறையை சார்ந்தே இருக்கிறது.

மாலைதீவில் உள்ள கடற்கரைக்கு இந்தியா உள்பட பிற நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

நிதி நெருக்கடியில் மாலைதீவு
குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் மாலைதீவுக்கு சுற்றுலாக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு முதல் இந்தியா – மாலைதீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. அதாவது மாலைதீவில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் இந்திய ஆதரவு அதிபராக இருந்த இப்ராஹிம் முகமது சோலி தோல்வியடைந்தார். அவரை பிஎன்பி கட்சியை சேர்ந்த முகமது முய்ஸு வீழ்த்தி வெற்றி பெற்று அதிபரானார்.

இந்தியா- மாலைதீவு
இந்த முகமது முய்ஸு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டதோடு சீனா ஆதரவாளராகவும் இருந்து வந்தார் இவர் தனது தேர்தல் பிரசாரத்திலேயே தான் வென்றால் மாலைதீவில் உள்ள இந்திய இராணுவ வீரர்களை வெளியேற்றுவேன் என்று கூறி பிரசாரம் செய்து வாகை சூடினார்.

அதேபோல் வெற்றி பெற்ற அவர் அங்குள்ள இந்திய இராணுவ வீரர்களை வெளியேறும்படி கூறினார். இது விவாதத்தை கிளப்பி உள்ளது. இத்தகைய சூழலில் பிரதமர் மோடி சமீபத்தில் லட்சதீவுக்கு சென்று புகைப்படம் வெளியிட்டார்.

மாலைதீவின் சுற்றுலா துறையை முடக்கும் வகையில் உள்நோக்கத்துடன் லட்சத்தீவை பிரதமர் மோடி ஆதரிப்பதாக அந்நாட்டு அமைச்சர்கள் கூறியதோடு இந்தியா குறித்து சர்ச்சை கருத்துகளையும் தெரிவித்தனர்.

உதவ முன்வராத சீனா
இது இந்தியா-மாலைதீவு இடையேயான பிரச்சினையை இன்னும் அதிகப்படுத்தியது. இதனால் கடும் கோபமடைந்த இந்தியர்கள் மாலைதீவு செல்வதற்கான டிக்கெட்டுகளை இரத்து செய்தனர்.

இதனால் மாலைதீவின் வருமானம் சடுதியாக வீழ்ச்சியடைந்தது.

தற்போது மாலைதீவின் வெளிக் கடன்கள் ஏறக்குறைய 4.038 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும் உள்கடன்கள் 2026-ல் வரவிருக்கும் கடன் நெருக்கடியுடன் ஒப்பிடும் அளவை விட அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முய்ஸு சீனா மற்றும் துருக்கியிடம் நிதி உதவிக் கேட்டதாகவும் ஆனால் அவர்கள் உதவ முன்வரவில்லை என்றும் சீனா தான் ஏற்கனவே கொடுத்த கடனை திருப்பிக் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.