பிணைக்கைதிகளை விடுவிக்க காலக்கெடுவை நிர்ணயித்தது இஸ்ரேல்
கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களை ஹமாஸ் அமைப்பு விடுவிக்க கால்கெடுவை நிர்ணயித்துள்ளது இஸ்ரேல்.
இதன்படி “மார்ச் 10 அல்லது 11 காலகட்டத்தில் இஸ்லாமியர்களின் ரம்ஜான் மாதம் தொடங்கும். ரம்ஜான் தொடங்கும் முன் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்கா விட்டால், பலஸ்தீன ரஃபா (Rafah) பகுதியில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம்.
இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை
இவ்வாறு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார் இஸ்ரேலி கபினெட் அமைச்சர் பென்னி கான்ட்ஸ். (Benny Gantz) இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரஃபா (Rafah) பகுதியில் உள்ள பொதுமக்களை அப்புறப்படுத்த அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் பேசவுள்ளோம். இது தீவிரமான நடவடிக்கைதான்.
ஹமாஸ் அமைப்பினருக்கு 2 வாய்ப்புகள்
ஹமாஸ் அமைப்பினருக்கு 2 வாய்ப்புகள் உள்ளன.அவர்கள் பிணைக்கைதிகளை விடுவித்து விட்டு சரணடையலாம். இதன் மூலம் காசா மக்களும் ரம்ஜான் கொண்டாட முடியும். இல்லையென்றால், தீவிர தாக்குதலை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.” என தெரிவித்துள்ளார்.