பிரித்தானியர்கள் 12 பேர்… கொலைப் பட்டியல் வைத்திருக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்
ரஷ்யாவை கடுமையாக விமர்சிக்கும் பிரித்தானியர்கள் 12 பேர்களுக்கு விளாடிமிர் புடின் குறி வைத்துள்ளதாக அவரது எதிரிகளில் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
12 பிரித்தானியர்கள்
சமூக செயற்பாட்டாளரும், தொழிலதிபரும், சமீபத்தில் மரணமடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் நண்பருமான Bill Browder என்பவரே விளாடிமிர் புடினின் கொலைப் பட்டியல் தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
குறைந்தது 12 பிரித்தானியர்கள் புடினின் கொலைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவில் தமது எதிரிகள் அனைவரையும் ஒழித்துக்கட்ட புடின் முடிவு செய்துள்ளார் என்றே Bill Browder குறிப்பிட்டுள்ளார்.
புடினால் ஆபத்து வரலாம்
புடினின் இந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். ரஷ்யாவில் மலிந்துள்ள ஊழல், முறைகேடுகளுக்கு எதிராக போராடும் Bill Browder தற்போது ரஷ்ய ஜனாதிபதிக்கு முதன்மையான எதிரிகளில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
பிரித்தானியாவில் அரசியல்வாதிகள், உயர் பதவியில் இருப்போர் ஆகியோருக்கு புடினால் ஆபத்து வரலாம் என குறிப்பிட்டுள்ள Bill Browder, குறைந்தது ஒரு டசின் பேர்கள் ஆபத்தில் உள்ளனர் என்றார்.