5-ம் கட்டப் பேச்சு: விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!
விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும், பயிா்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாபை சோ்ந்த விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியை முன்னெடுத்துள்ளனா். ஹரியாணா, உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விவசாய அமைப்பினரும் இப்போராட்டத்துக்கு ஆதரவாக உள்ளனா்.
விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய 4 கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், இன்று மீண்டும் தில்லியை நோக்கி விவசாயிகள் படையெடுத்துள்ளனர்.
ஹரியாணா எல்லையில் விவசாயிகளை தடுத்து நிறுத்தி காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.
விவசாயிகளும் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளையும், முள்வேலிகளையும் தகர்க்க ஜேசிபி போன்ற கனரக வாகனங்களுடன் போராடி வருகின்றனர்.
5-ம் கட்டப் பேச்சு: விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!
தில்லி நோக்கி வரும் விவசாயிகளுக்காகக் காத்திருக்கும் முள்கம்பிகள், தடுப்புகள்
இந்த நிலையில், விவசாயிகளை 5-ஆம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா அழைத்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவு:
“விவசாயிகளின் பிரச்னை குறித்து தொடர்ந்து 5-ஆம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக உள்ளது. அமைதியைப் பேணுவது முக்கியம்.” என்று தெரிவித்துள்ளார்.