விண்வெளியில் ஆணு ஆயுதங்களா..? ரஷ்ய அதிபர் புடின் வெளியிட்ட தகவல்!
விண்வெளியில் அணு ஆயுதங்களை வைக்கும் எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் அணு ஆயுதம் உள்பட பேரழிவு ஏற்படுத்தக்கூடிய எந்த விதமான ஆயுதங்களையும் நிலைநிறுத்தக்கூடாது என்ற ஒப்பந்தம் அமலில் உள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ரஷ்யா உள்பட 130 -க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன.
இதனிடையே, விண்வெளி திட்டங்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் ரஷ்யா செயல்படுவதாகவும், விண்வெளியில் செயற்கைகோள் ஆயுத திறனை அந்த நாடு பெற்றுள்ளதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.
செயற்கைகோள் ஆயுதம் என்பது எந்த வகையானது என்ற விவரத்தை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. ஆனால் அது அணுஆயுதம் சார்ந்தது என்ற தகவல் பரவியது.
இந்த நிலையில், அமெரிக்காவின் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்ததாவது,
இந்த விடயத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவானது வெளிப்படையானது. விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை’ என்று கூரியுள்ளார்.