அநுராதபுரம் மாவட்ட மாணவர்களில் அதிகரிக்கும் பார்வைக் குறைபாடு
அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை செல்லும் சிறுவர்களில் 60 வீதமானோர் பார்வைக் குறைபாடு உடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய கண் மருத்துவமனையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் குஷானி குணரத்ன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் 12 கண்சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு, பார்வைக் குறைபாடுள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கும் வகையில் கண் மருத்துவர்கள் சங்கம் ஏற்பாடு செய்து செயற்படுத்தியதன் மூலம் இது தெரியவந்துள்ளது.
ஏனைய மாவட்டங்களிலும் அவ்வாறான கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்ட போதும், பார்வைத் திறன் குறைபாடுள்ள மாணவர்கள் பெருமளவில் கண்டறியப்படவில்லை.
மருத்துவர் சங்கம்
அந்தவகையில், ஏனைய மாவட்டங்களை விட அநுராதபுரம் மாவட்டம் 60% பார்வையற்ற மாணவர்களைக் கொண்ட மாவட்டமாக தேசிய கண்மருத்துவமனை மருத்துவர் சங்கத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.