மதுபானங்களின் விலை குறைப்பு:ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்துழைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மதுபானங்களின் விலை
அவர் மேலும் கூறுகையில்,பொருளாதார பாதிப்பு காரணமாக நாட்டு மக்கள் கடந்த மூன்றாண்டு காலமாக நிம்மதியாக இல்லை.மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை புத்தாண்டை கொண்டாடவுமில்லை.
மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டதால் சட்டவிரோத மதுபான உற்பத்திகள் அதிகரித்துள்ளன.
எனவே இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் என்ற பணிவான கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்.
ஜனாதிபதி வேட்பாளர்கள்
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு தற்போது மீண்டுள்ளது.தற்போதைய முன்னேற்றத்தைத் தொடர வேண்டும்.
பொருளாதாரம் முன்னேற்றமடைந்ததன் பின்னர் அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் ,மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள்.
கூட்டத்தை கூட்டுவதால் ஜனாதிபதியாகி விட முடியாது என்பதை எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
எமது ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க என்பதில் மாற்றமில்லை என கூறியுள்ளார்.