;
Athirady Tamil News

ஜோ பைடன் நீக்கப்படுவார்… பதிலுக்கு பிரபலம் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி: கசிந்த தகவல்

0

முதுமை நிலையில் இருக்கும் ஜோ பைடனை ஜனாதிபதி தேர்தலுக்கும் 3 மாதங்கள் முன்பு போட்டியில் இருந்து அவரது கட்சி நீக்கும் என்ற தகவல் கசிந்துள்ளது.

மூத்த உறுப்பினர்கள் கவலை
முதுமை காரணமாக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தடுமாறுவதும், உளறுவதும் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர்களை கவலை கொள்ள வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆகஸ்டு மாத மத்தியில், ஜோ பைடனின் இரண்டாவது முறை என்ற நம்பிக்கையை கலைக்க மூத்த உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

கட்சி வேட்பாளரை உத்தியோகப்பூர்வமக அறிவிக்கும் பொருட்டு சிகாகோவில் எதிர்வரும் ஆகஸ்டு 19ம் திகதி ஜனநாயகக் கட்சி மூத்த உறுப்பினர்கள் ஒன்று கூட உள்ளனர்.

ஜோ பைடனுக்கு பதிலாக களமிறங்க இதுவரை எவரும் முன்வரவில்லை. ஆனால் துணை ஜனாதிபதி பொறுப்பில் இருக்கும் கமலா ஹாரிஸ் தாம் ஜனாதிபதி பதவிக்கு தயார் என சூசகமாக குறிப்பிட்டு வருகிறார்.

டொனால்டு ட்ரம்புக்கு எதிராக
இதனிடையே, எதிர்வரும் தேர்தலில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் தெரிவாக வேண்டும் என கட்சியின் மூத்த உறுப்பினர்கள் விரும்புகின்றனர்.

அத்துடன், ஜோ பைடனுக்கு எதிரான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் மிச்சிகன் ஆளுநர் Gretchen Whitmer மற்றும் கலிபோர்னியா ஆளுநர் Gavin Newsom ஆகியோரில் ஒருவர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக களமிறங்கவே அதிக வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.

மிச்செல் ஒபாமா களமிறக்கப்பட்டாலும் வியப்பதிற்கில்லை என்றே ஜனநாயகக் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.