காதல் படுத்தும் பாடு: ஒரே ஊரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நான்கு மரணங்கள்…
இந்தியாவில் , ஒரே ஊரைச் சேர்ந்த சகோதரிகளை காதலித்த உறவினர்களான இளைஞர்கள் இருவர், தாங்களாகவே தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.
ஒரே ஊரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நான்கு மரணங்கள்
இந்தியாவின் குஜராத்திலுள்ள Althan என்னுமிடத்தைச் சேர்ந்தவர்கள் நரேந்திர வர்மாவும் (Narendra Verma, 19), புஷ்பேந்திர வர்மாவும் (Pushpendra Verma, 18). இருவரும் உறவினர்கள். புஷ்பேந்திராவின் தந்தை நரேந்திராவின் தாய்மாமா.
இவர்கள் இருவரும், தங்கள் குடும்ப நண்பர்களின் மகள்களான நீலம் ஷர்மா (Nilam Sharma, 20) மற்றும் ரோஷினி வர்மா (Roshni Sharma, 18) என்னும் பெண்களுடன் பழகிவந்துள்ளார்கள். நீலம் மற்றும் ரோஷினியின் தந்தைகள் உடன்பிறந்த சகோதரர்கள்.
இந்நிலையில், அந்தப் பெண்கள் தங்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தத்தம் காதலர்களை வற்புறுத்திவந்துள்ளார்கள்.
ஆனால், நரேந்திராவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. ஆகவே தன்னால் நீலத்தை திருமணம் செய்துகொள்ளமுடியாது என்று அவர் கூறியிருக்கிறார்.
புஷ்பேந்திராவோ, தான் தன் பெற்றோர் சம்மதத்தைப் பெற்ற பிறகுதான் திருமணம் செய்துகொள்வேன் என ரோஷினியிடம் கூறியுள்ளார்.
எடுத்த தவறான முடிவு
இந்நிலையில், திங்கட்கிழமை, நீலமும் ரோஷினியும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். அவர்களை உறவினர்கள் தேடும்போதுதான், அவர்கள் இருவரும் ஆள் நடமாட்டமில்லாத ஒரு இடத்தில் ஒரு மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்கள் என்பது.
காதலிகளின் முடிவால் கடும் அதிர்ச்சியடைந்த நரேந்திராவும் புஷ்பேந்திராவும், நேற்று, அதாவது, புதன்கிழமை, தங்கள் காதலிகள் தூக்கில் தொங்கிய அதே மரத்தில் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.
ஒரே ஊரைச் சேர்ந்த உறவினர்களான நான்கு பேர், இரண்டு நாட்கள் இடைவெளியில் உயிரழந்ததால், அக்கிராமமே துயரத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளது.