கொழும்பு மாவட்ட காணிகளின் மதிப்பில் மந்தநிலை: வெளியானது புள்ளிவிபரம்
கொழும்பு மாவட்டத்திற்கான காணி மதிப்பீடு மந்தநிலையில் அதிகரிப்பதாக கொழும்பு மாவட்டத்திற்கான காணி மதிப்பீட்டு காட்டியின் வருடாந்த கணிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 7.1 சதவீத வளர்ச்சி விகிதம் பதிவுசெய்யப்பட்டுள்ளது
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, கொழும்பு மாவட்டத்திற்கான காணி மதிப்பீட்டின் அனைத்து துணை குறிகாட்டிகளிலும் இந்த மந்தநிலையை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணி மதிப்பீடுகள்
அதில் கொழும்பு மாவட்டத்திலுள்ள குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை காணி மதிப்பீடுகள் முறையே 8.8 சதவீதம், 6.7 சதவீதம் மற்றும் 5.9 சதவீதம் ஆக அதன் ஆண்டு அதிகரிப்புகளை பதிவு செய்திருந்தன.
இது 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது, 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 2.1 சதவிகிதமான சிறியளவான வளர்ச்சியே பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீழ்ச்சிக்குக் காரணம்
இது கொழும்பு மாவட்டத்திற்கான காணி மதிப்பீடு, அரை ஆண்டு அடிப்படையிலும் சரிவைச் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2023 ஆம் ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடுகையில், தொழில்துறை காணி மதிப்பீடுககளின் மெதுவான அதிகரிப்பு மற்றும் வணிக மற்றும் குடியிருப்பு காணி மதிப்பீடுகளின் மெதுவான அதிகரிப்பே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.