டுபாயில் வேலை தேடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு! காரணம் இது தான்
ஒவ்வொரு ஆண்டும் தொழில் வாய்ப்புகளுக்காக ஏராளமானோர் டுபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நாடுகளிற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதை தாண்டி அதிகளவானோர் அங்கு குடியேறுவதனையும் அதிகளவில் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான காரணம் தொடர்பாக ஆராய்கையில் அங்கு தொழிலாளர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் வழங்கப்படுகின்ற சம்பளம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சராசரி சம்பளம்
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் இங்கு தொழில்வாய்ப்புக்காக பிற நாட்டில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு அதிக ஊதியமே காரணம்.
உலகின் முன்னணி ஆட்சேர்ப்பு நிறுவனமான Glassdoor வெளியிட்டுள்ள தகவல்களின்படி, டுபாயில் தொழிலாளர்களின் சராசரி சம்பளம் 2000 திர்ஹாம்கள் (டுபாயின் நாணயம்) ஆக உள்ளது, அதாவது இலங்கை ரூபாய் மதிப்பில் 170,000 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, டுபாயின் உள்ளூர் பகுப்பாய்வு நிறுவனங்கள் வழங்கிய தகவல்களின் படி, 2023 இல் சவுதி அரேபியாவில் குறைந்தபட்ச சம்பளம் 600-3000 திர்ஹாம்கள் என குறிப்பிட்டுள்ளது, அதாவது இலங்கை ரூபாய் மதிப்பில் 51,000 ரூபாய் – 255,000 ரூபாய் வரையாகும்.
இந்த சம்பள விகிதமானது ஊழியர் மற்றும் நிறுவனத்தின் தகுதிகளைப் பொறுத்து வேறுபடுகின்றது என தெரிவிக்கப்படுகிறது, டுபாயில் உள்ள ஒரு உணவகத்திலே உதவியாளராக ஒருவர் பணிபுரிந்தால், மாதம் 10,070 திர்ஹம் அல்லது 855,950 ரூபாய் வரை சம்பளமாக பெற்றுக்கொள்ளலாம்.
வேலை மற்றும் தகைமை
இதேபோல் இங்கு வேலை செய்பவர்களுக்கு அவர்களது வேலை மற்றும் தகைமைகளை பொறுத்து சம்பளம் வேறுபடுகின்றது, அதேவேளை அதிகளவான சம்பளம் கொடுக்கப்படுவதனால் தொழில்வாய்ப்புக்களை தேடி இந்த நாடுகளுக்கு மக்கள் அதிகளவில் செல்லவும் ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையே டுபாயில் வேலையினை பெற்றுக்கொள்வது எப்படி என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள நிலையில், டுபாயில் உள்ள நிறுவனங்களிற்கு நிகழ்நிலை மூலமாக அல்லது ஏதேனும் ஆட்சேர்ப்பு நிறுவனம் மூலமாக விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தவிரவும் எந்தவொரு நாட்டிலும் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிய, உங்களுக்கு விசா தேவை என்பதால் அந்த முறைமைகளையும் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கிடையே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரும் மோசடி செய்து வருவதனால். சரியான நிகழ்நிலை ஆட்சேர்ப்பு முறைமை அல்லது ஏஜென்சி மூலம் நாம் வேலைக்கு முயற்சிப்பது உசிதமானது என கோரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.