சீனாவில் பாரிய வாகன விபத்து! 100 கார்கள் சேதம்
சீனாவின் சௌச்சோவ் (Souchov) நகரில் உள்ள வீதியொன்றில் சுமார் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சௌச்சோவ் நகரை பாதித்த கடும் பனிப்பொழிவு காரணமாக இந்த வாகன விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆறு பேர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து
சீனாவின் சுஸ்ஹோவ் மாகாணத்தில் அதிவேக சாலையில் கடும் பனி மூட்டம் காரணமாக சாலை தடம் தெரியாமல் வேகமாக வந்த கார்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் நூறுக்கு மேற்பட்ட கார்கள் சேதமடைந்துள்ள நிலையில், காருக்குள் பலர் சிக்கி வெளிவர முடியாமல் தவித்துள்னர்.
இந்த விபத்து தொடர்பான காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
எச்சரிக்கை
கடும் பனிப்பொழிவு தொடர்பில் சீன வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், குறித்த பகுதியின் அதிவேக சாலைகள் மூடப்பட்டிருந்தன.
இதனை மீறி வாகனங்கள் குறித்த பகுதிக்குள் பிரவேசித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.