உலகத்திலேயே பிரபலமான தலைவர்களில் மோடிக்கு முதலிடம்!
உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.
மார்னிங் கன்சல்ட் (Morning Consult survey) என்ற நிறுவனம் உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை நடத்தியது. இதனை, கடந்த ஜனவரி 30-ம் திகதி முதல் பிப்ரவரி 5-ம் திகதி வரை ஒரு வார காலம் நடத்தியது.
முதல் 10 இடங்கள்
* இந்த கருத்துக்கணிப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) 78 சதவீதம் வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
* இரண்டாவது இடத்தில் 65 சதவீத வாக்குகள் பெற்று மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபஸ் (Andres Manuel Lopez) உள்ளார்.
* மூன்றாம் இடத்தில் 63 சதவீத வாக்குகள் பெற்று அர்ஜென்டினா அதிபர் ஜாவிர் மிலே (Javier Milei) உள்ளார்.
* நான்காம் இடத்தில் 52 சதவீத வாக்குகள் பெற்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) உள்ளார்.
* ஐந்தாம் இடத்தில் 51 சதவீத வாக்குகள் பெற்று சுவிட்சர்லாந்தின் வையோலா அம்ஜெர்ட் (Viola Amherd) உள்ளார்.
* ஆறாம் இடத்தில் 46 சதவீத வாக்குகள் பெற்று பிரேசில் அதிபர் டி சில்வா (Luiz Inacio Lula da Silva) உள்ளார்.
* ஏழாம் இடத்தில் 45 சதவீத வாக்குகள் பெற்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனேசி (Anthony Albanese) உள்ளார்.
* எட்டாம் இடத்தில் 41 சதவீத வாக்குகள் பெற்று இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி (Giorgia Meloni) உள்ளார்.
* ஒன்பதாம் இடத்தில் 39 சதவீத வாக்குகள் பெற்று ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) உள்ளார்.
* பத்தாம் இடத்தில் 38 சதவீத வாக்குகள் பெற்று பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரு (Alexander De Croo) உள்ளார்.