52 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவில் தரையிறங்கிய அமெரிக்க கலம்
சுமாா் 52 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஆய்வுக் கலமொன்று நிலவில் முதல்முறைாக தரையிறங்கியுள்ளது. ‘இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ்’ என்ற நிறுவனத்தின் ஓடிஸியஸ் என்ற அந்த ஆய்வுக் கலம்தான், வா்த்தக ரீதியில் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ள முதல் ஆய்வுக் கலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமும் தங்களது சோதனைக் கருவிகளை இந்த ஆய்வுக் கலத்தில் இணைத்துள்ளது. இது குறித்து நாசா தலைமை நிா்வாகி பில் நெல்சன் கூறுகையில், ‘அரை நூற்றாண்டு கழித்து முதல்முறையாக அமெரிக்கா நிலவில் தரையிறங்கியுள்ளது’ என்றாா்.