மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: மரக்கறிகளின் விலைகளில் திடீர் மாற்றம்
மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேலியகொட பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எச்.டி.என்.சமரதுங்க கூறியுள்ளார்.
இதனுடன் ஒவ்வொரு மரக்கறிகளும் 500 ரூபாய் வரையில் விலை குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேலியகொட மெனிங் சந்தை நேற்று போயாதினம் என்பதால் மூடப்பட்டிருந்ததாகவும் இன்று (24) வணிக வளாகம் திறக்கப்படுமெனவும் அத்தோடு கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலைகள் மிகவும் குறைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரக்கறி
இதனடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2000 முதல் 2500 ரூபாய் வரையில் இருந்த ஒரு கிலோ கரட் தற்போது 300 ரூபாயாக குறைந்துள்ளது.
இந்நிலையில், பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளின் மொத்த விலை இன்று குறைந்துள்ளதுடன் கரட்டின் விலை கிலோ ரூபா 350 ஆகவுள்ளது.
கோழி, இறைச்சி
அதன்படி ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை ரூபா 450, பீன்ஸ் ரூபா 450, லீக்ஸ் ரூபா 300 என்ற அடிப்படையிலும் குடைமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் மொத்த விற்பனை விலை சற்று உயர்ந்து ரூபா 700 மற்றும் ரூபா 600 ஆகவும் அத்தோடு ஒரு கிலோ இஞ்சி ரூபா 1200 ஆகவும் உள்ளது.
மேலும், ஒரு கோழி இறைச்சி 1150 ரூபாவாகவும், ஒரு கிலோ ஆட்டிறைச்சி 3300 ரூபாவாகவும் மற்றும் ஒரு கிலோ மாட்டிறைச்சி 2300 ரூபாவாகவும் விலை மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.