நாடளாவிய ரீதியில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு
கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 10,69,000 பேருக்கு மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைப்பதற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், துண்டிக்கப்பட்ட இணைப்புகளுக்கு மறு இணைப்பை பொருத்த கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பதோடு, நிலுவையில் உள்ள கட்டண தொகையை தவணையாக செலுத்த அனுமதிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதிய இணைப்பு
கடன் அடிப்படையில் புதிய இணைப்புகளை வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணத்துடன் முழு இணைப்புக் கட்டணத்தையும் தவணை முறையில் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட மேலும் தெரிவித்துள்ளார்.