;
Athirady Tamil News

வல்லரசு நாடொன்றில் இருந்து இறக்குமதியான அரிசி: புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம் என கண்டுபிடிப்பு

0

கரீபியன் தீவு நாடான ஹைதியில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் புற்றுநோய் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் அளவுக்கு விஷத்தன்மையுடன் காட்மியம் போன்ற கனரக உலோகங்கள் கலந்திருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மலிவான விலையில் அரிசி இறக்குமதி
அமெரிக்காவிடம் இருந்து பெருமளவு அரிசி இறக்குமதி செய்யும் நாடுகளில் ஹைதியும் ஒன்று. மிக ஏழை நாடான ஹைதி மலிவான விலையில் அரிசி இறக்குமதியை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில் மிச்சிகன் பல்கலைக்கழகம் முன்னெடுத்த ஆய்வில், ஹைதியில் விளையும் அரிசிவிடவும் இறக்குமதியான அரிசியில் சராசரி ஆர்சனிக் மற்றும் காட்மியம் செறிவுகள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கலந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஹைதியில் இறக்குமதி செய்யப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து அரிசி மாதிரிகளும் அமெரிக்காவால் சிறார்களுக்கு உகந்ததல்ல என்று நிராகரிக்கப்பட்ட அளவைக் கடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், பிற நாடுகளில் இருந்து ஹைதி நிர்வாகம் இறக்குமதி செய்யும் அரிசியில் கலந்திருக்கும் விஷம் தொடர்பில் ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை.

1980 மற்றும் 1990களில் ஹைதியில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார நெருக்கடியை அடுத்து மலிவு விலையில் நீண்ட பல ஆண்டுகளுக்கான அரிசி இறக்குமதி ஒப்பந்தமானது முன்னெடுக்கப்பட்டது.

ஆண்டுக்கு 12 கிலோ அளவுக்கு
ஹைதி இறக்குமதி செய்யும் அரிசியில் 90 சதவிகிதம் அமெரிக்காவில் இருந்தே வருகிறது. ஜனாதிபதி பில் கிளிண்டன் காலகட்டத்தில் இந்த ஒப்பந்தமானது முன்னெடுக்கப்பட்டது. ஆனால் பின்னர் ஹைதியின் உள்ளூர் உற்பத்தியை மொத்தமாக நசுக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அமெரிக்க அரிசியில் காணப்பட்ட ஆர்சனிக் மற்றும் காட்மியம் செறிவுகள் மனிதர்களுக்கு மட்டுமின்றி, உணவுக்கும் நிலத்தடி நீருக்கும் ஆபத்தை விளைவிப்பவை என்றே கூறப்படுகிறது.

அரிசி குறிப்பாக இந்த உலோகங்களை உறிஞ்சும் தன்மை கொண்டது. 2020ல் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் ஹைதி மக்கள் சராசரியாக ஆண்டுக்கு 85 கிலோ அரிசியை உணவாக்குகின்றனர். அமெரிக்க மக்கள் ஆண்டுக்கு 12 கிலோ அளவுக்கு மட்டுமே அரிசி உணவை உட்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.