;
Athirady Tamil News

பொருட்களின் விலையை குறைப்பது எப்போதும் சாத்தியமில்லை : அரச தரப்பின் அறிவிப்பு

0

பொருட்களின் விலையை குறைப்பது எப்போதும் சாத்தியமில்லை. மாறாக மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்காலத்தில் பொருளாதாரம் முன்னேற்றமடையும் பட்சத்தில் பெறுமதி சேர் வரியைக் குறைக்க முடியும் என ஜனாதிபதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்ப உரையில் தெரிவித்தார்.

மக்களின் வருமானம்
வரவுசெலவுத்திட்ட சமயத்திலும் இந்த விடயத்தைச் சொன்னார். பெறுமதி சேர் வரி மாத்திரமல்ல மக்களின் வருமான நிலையை மேம்படுத்தும் திட்டமும் தயாரிக்கப்பட வேண்டும்.

பொருட்களின் விலையை குறைப்பது எப்போதும் சாத்தியமில்லை. இன்று இந்தியாவுக்குப் போய் தோசை சாப்பிடும் போது, அன்றைய காலத்தைவிடத் தற்பொழுது விலை அதிகம்.

ஏனைய நாடுகளுக்குச் சென்றாலும் இவ்வாறான நிலைமையே காணப்படுகிறது. ஆனால், பொருட்களின் விலை உயரும்போது மக்களின் வருமானம் அதிகரிக்க வேண்டும். வருமானத்தை அதிகரிக்க ஒரு ஏற்பாடு தேவை. அதற்கு, நாட்டில் உற்பத்தி செயல்முறையைத் தொடங்க வேண்டும்.

நாம் மேற்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அரசு சீர்திருத்தங்கள் மூலம் இந்தத் திட்டம் நாட்டுக்கு முன்வைக்கப்பட வேண்டும்.

1977 இல் திறந்த பொருளாதாரத்திற்குப் பிறகும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சூழ்நிலையில் இருந்தோம். இந்த நிலைமையை உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.