பிரான்ஸ் தலைநகர் பரிஸில் பாரிய போராட்டம் – பாதுகாப்புப் படையினருடன் மோதல்
பிரான்சின் தலைநகர் பரிஸில் நடைபெறும் வருடாந்த விவசாய கண்காட்சியை விவசாயிகள் குழு பாரிய முற்றுகை போராட்டம் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோதல்கள் சம்பவங்கள்
இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகளின் வருமானக் குறைப்பு பருவநிலை மாற்றம் விவசாயத் துறையில் முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஆதரவு அளிக்கக் கோரியே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாரிஸ் விவசாய கண்காட்சி பிரான்சில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்ற நிலையில் 09 நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் 06 இலட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.