முச்சக்கர வண்டியை மோதிய லொறி; கணவர் பிள்ளைகளுடன் சென்ற பெண்னிற்கு நேர்ந்த துயரம்
தங்கல்ல பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த லொறியொன்று தலல்ல பிரதேசத்தில் வைத்து முச்சக்கர வண்டியில் மோதியதில் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் கணவன் மற்றும் இரண்டு பிள்ளைகள் உட்பட நால்வர் படுகாயமடைந்து தலல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தர பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கப்பரவெல்ல கொட்டகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இரு பிள்ளகளின் தாய் ஆவார்.
உயிரிழந்த பெண் தனது 14 வயது மகள் மற்றும் பதினொரு மாத ஆண் குழந்தை மற்றும் மற்றுமொரு உறவினருடன் முச்சக்கரவண்டியில் பயணித்த நிலையில் , பெண்ணின் கணவர் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றபோதே விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.