சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முறியடிப்போம்! மகிந்த திட்டவட்டம்
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றம் மற்றும் அரசியலமைப்பின் நம்பிக்கையை மீறியுள்ளதாக தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியினரால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், லக்ஸ்மன் கிரியெல்ல, ஜி.எல். பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, சந்திம வீரக்கொடி மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோர் இன்றையதினம் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்நிலையில், மகிந்த ராஜபக்ஷ இன்று(26) நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு சென்றிருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியினரால் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மகிந்த ராஜபக்சவிடம் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என தெரிவித்தார்.