கனடாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்துள்ள ஒரு வகை புற்று நோய்
கனடாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் பெருங்குடல் புற்று நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கனாடவில் பெண்களில் 18 பேரில் ஒருவருக்கும் ஆண்களில் 16 பேரில் ஒருவருக்கும் இவ்வாறு பெருங்குடல் புற்று நோய் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் புற்று நோய்த் தாக்கத்தில் பதிவாகும் மரணங்களில் சுமார் 11 வீதமான மரணங்கள் பெருங்குடல் புற்று நோய்த் தாக்கத்தினால் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
50 வயதுக்கும் மேற்பட்டவர்களை விடவும், 50 வயதுக்கும் குறைந்தவர்கள் மத்தியில் பெருங்குடல் புற்று நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதனால் இவ்வாறு இளையோர் மத்தியில் அதிகளவில் புற்று நோய் ஏற்படுகன்றது என்பது குறித்து ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நோய் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் நோயாளர்களை குணப்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் எனவும் ஆய்வுகள் முன்னெடுக்க்பபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.