மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பியோடிய 191 போதை அடிமைகள்!
வியட்நாமில் போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு மறுவாழ்வு மையங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், வியட்நாம் – மேகாங் டெல்டா பகுதியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு (24-02-2024) ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 191 பேர் தப்பியோடியுள்ளனர்.
அறைகளின் கதவை உடைத்து வெளியேறிய அவர்கள் மறுவாழ்வு மையத்தின் பாதுகாவலர்களை தாக்கிவிட்டு சுவர் ஏறி குதித்து தப்பியோடியுள்ளனர். சிலர் சுவரில் ஓட்டை போட்டு அதன் வழியாக வெளியேறியுள்ளனர்.
இதேவேளை தப்பிச் சென்றவர்களில் நேற்று (26-02-2024) மதிய நிலவரப்படி, 94 பேர் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
சுமார் 100 பேரை பொலிஸார் மற்றும் குடும்பத்தினர் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.