;
Athirady Tamil News

எவரெஸ்ட் மலையேறுபவர்களுக்கான புதிய திட்டம்

0

எவரெஸ்ட் மலைசிகரத்திற்கு ஏறுபவர்களுக்கு நேபாள அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இமயமலைத் தொடரில் சீனா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உலகின் உயரமான மலைச்சிகரம் தான் எவரெஸ்ட் மலை மலைச்சிகரம். இந்த மலையின் உயரம் 8,849 மீட்டர் (29,032 அடி) ஆகும்.

இந்த எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் வடக்கில் திபெத்தும், தெற்கில் நேபாளமும் உள்ளன.

புதிய கட்டுப்பாடு
ஒவ்வொரு வருடமும், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொடும் சாதனைக்காக பலரும் தங்களை தயார்படுத்திகொண்டு உயிரை பணயம் வைத்து கடினமான இந்த மலையேற்றத்தில் ஈடுபடுவார்கள்.

இந்த முயற்சியில் 1953ல் இருந்து சுமார் 300 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவரெஸ்ட் பேஸ் கேம்ப் (Everest base camp) எனப்படும் மலையடிவார தளம் 18,000 அடி உயரத்தில் உள்ளது.

எவரெஸ்ட் மலையேறுபவர்கள்
அங்கிருந்து மலையுச்சியை அடையும் முயற்சியில் பனிமழை, பனிப்புயல், பனிச்சரிவு உள்ளிட்ட காரணங்களால், காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பது மிக கடினமான செயலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இச்சிக்கலை தவிர்க்கும் முயற்சியாக நேபாள அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இது தொடர்பில் பேசிய நேபாள சுற்றுலா துறை தலைமை அதிகாரி ராகேஷ் குருங் தெரிவிக்கையில், “எவரெஸ்ட் மலையேறும் முயற்சியில் ஈடுபடும் அனைத்து வீரர்களுக்கும் அவர்களின் உடையில் அணிந்து கொள்ளும் வகையில் ஒரு மின்னணு “சிப்” அரசாங்கத்தால் வழங்கப்படும்.இதன் மூலம் மலையுச்சியை அடையும் முயற்சி பாதுகாப்பானதாக இருக்கும்.

மேலும், அவசர காலகட்டங்களில் தேடுதல் பணிகளை எளிதாக்கவும் முடியும்” என தெரிவித்தார்.

இந்த மலையேறும் பயணத்தில் 2023ல் ஒரு இந்தியர், ஒரு சீனர், 4 நேபாளிகள் உட்பட 12 மலையேறும் வீரர்கள் உயிரிழந்ததுள்ளதாக நேபாள சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.