நீருக்கடியில் மூழ்கிய இந்திய பிரதமர் – மயில் இறகுகளை கொண்டு சென்றது ஏன்?
Follow us on Google News
விளம்பரம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க இடமான துவாரகா கடற்கரையில் மூழ்கி பிரார்த்தனை செய்துள்ளார்.
நீருக்கடியில் மூழ்கிய இந்திய பிரதமர்
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சி செய்வதற்காக பேய்ட் துவாரகா தீவுக்கு அருகில் உள்ள துவாரகா கடற்கரையில் ஸ்கூபா டைவிங் செய்து வருகின்றனர்.
இதன் போது பண்டைய துவாரகாவின் பொருட்களை நீருக்கடியில் மக்கள் காணலாம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் கடலுக்கு அடியில் மூழ்கியதாக அறியப்படுகிற, துவாரகா நகரத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் இந்திய பிரதமரும் ஸ்கூபா டைவிங் செய்துள்ளார்.
பிரதமர் மோடி ஸ்கூபா கியர் அணிந்து கடலில் இறங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Dwarka Darshan under the waters…where the spiritual and the historical converge, where every moment was a divine melody echoing Bhagwan Shri Krishna’s eternal presence. pic.twitter.com/2HPGgsWYsS
— Narendra Modi (@narendramodi) February 25, 2024
இது குறித்து நரேந்திர மோடி கூறிய போது, தண்ணீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவத்தை வழங்குகிறது. ஆன்மீக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பக்தி கொண்ட ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணா. எங்கள் அனைவரையும் ஆசீர்வதிகவும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தரிசிப்பதற்காக மயில் இறகுகளை காணிக்கை வைத்து வழிபட்டுள்ளார்.