விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்சவுக்கு எதிரான வழக்கொன்று மே மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 06ம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் அல் ஹுசைன் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
நீதிமன்ற விசாரணை
அவரது இலங்கை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு, தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதாக விமல் வீரவங்ச மற்றும் 06 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அது தொடர்பான வழக்கு நேற்று(26) கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் முன்னாயிருக்கவில்லை.
அவரது கட்சிக்காரர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அதனால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.
அதனையடுத்த வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.