அழகை பெற உங்கள் உயிரை பணயம் வைக்காதீர்கள்: சத்திர சிகிச்சைகள் தொடர்பில் எச்சரிக்கை
அழகிற்காக பயிற்சி பெற்ற வைத்தியர்களின் தலையீடு இல்லாமல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், தகுதியற்ற வைத்தியர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் சங்கத்தின் சிறப்பு மருத்துவர்கள் குழு செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை
நாட்டில் பல பயிற்சியற்ற மற்றும் தகுதியற்ற வைத்தியர்கள் வைத்திய துறையில் பணிபுரிவதாகவும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யும் போது அந்த வைத்தியர்கள் செயற்பாடு ஆபத்தினை ஏற்படுத்துவதாகவும் சங்கத்தின் சிறப்பு வைத்தியர் அமில ஷசங்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
“கண்டியில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலைகள் உலக சாதனை படைத்ததாக அண்மையில் செய்திகள் வந்தன. 62 வயது மூதாட்டி ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லிட்டர் எண்ணெயை கட்டியை அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் அகற்றியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வகை அறுவை சிகிச்சையில், 8 லிட்டருக்கு மேல் அகற்றப்படுவதில்லை. ஏனெனில் அது உயிருக்கு ஆபத்தானது. இது கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சை அல்ல. இது உடலின் வடிவத்தை மீட்டெடுக்கும் அறுவை சிகிச்சை.எனவே அழகை பெற உங்கள் உயிரை பணயம் வைக்காதீர்கள்.
இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் நிலைமை மிகவும் மோசமாகி, பலமுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.