ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள்: சம்பளம் தொடர்பில் வெளியானது தகவல்
ரஷ்ய இராணுவத்தில் இந்திய குடிமக்கள் இணைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய உக்ரைன் போரானாது, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளை தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், போரில் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரஷ்யா உலகளாவிய ரீதியில் அதிகமான போராளிகளுக்கான தேடலில் இருப்பதாகவும், அதற்காக முறைசாரா இடைத்தரகர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
ஆட்சேர்ப்பு மையம்
அதேவேளை, ரஷ்ய தலைநகரமான மொஸ்கோவில் உள்ள இராணுவ ஆட்சேர்ப்பு மையத்தில் பணிபுரியும் இந்திய மொழிபெயர்ப்பாளர் ஒருவர், கடந்த வாரம் 10 இந்தியர்கள் தங்கள் ஆட்சேர்ப்பு மையத்திற்கு வருகை தந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ஒவ்வொரு ஆட்சேர்ப்பு மையத்திற்கும் வெளிநாட்டினர் செயலாக்கப்படுவதாகவும் 70 முதல் 100 இந்திய குடிமக்கள் சேர்க்கப்படுவதை தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இந்தியர்களில் அப்பிள் விவசாயி, விமான சேவை வழங்குபவர் மற்றும் பட்டதாரி ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
சம்பளம்
அத்துடன், சேர்க்கப்பட்ட சில இந்தியர்களுக்கு போர் அல்லாத பணிகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் உக்ரைனுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு அவர்கள் Kalashnikov துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏற்கனவே ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 5 இந்தியர்களுக்கு, இராணுவ உதவியாளர்களாக பணியாற்ற மாதம் சுமார் 1,200 டொலர்கள் சம்பளமாக வழங்கப்படுகின்றதாகவும் கூறப்படுகிறது.