போரில் ரஷ்ய கட்டாயம் தோல்வியை தழுவ வேண்டும்! பிரான்ஸ் அதிபர் திட்டவட்டம்
கடந்த 2022 பெப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷ்ய – உக்ரைன் போர், 2 வருடங்களைக் கடந்து தீவிரமடைந்துள்ளது.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதியுதவிகளை வழங்கிவந்தது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆதரவான நாடுகளின் சந்திப்பு, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றது.
இதில் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் தெரிவித்தது,
இந்த போரில் ரஷ்யா வெற்றி பெறக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புடன் நிலையாக இருக்க ரஷ்யா இப்போரில் தோற்க வேண்டியது அவசியம்.
ரஷ்யா வெற்றி பெறாமலிருக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன்தான் நாங்கள் போரிடுகிறோமே தவிர ரஷ்ய மக்களுடன் அல்ல.
குறுகிய தூர மற்றும் தொலைதூர ஏவுகணைகளும், வெடிகுண்டுகளும் உக்ரைனுக்கு விரைவில் வழங்கப்படும்.
உக்ரைனுக்கு நட்பு நாடுகளின் ராணுவத்தை அனுப்ப வேண்டிய சூழல் வந்தால் அதையும் பரிசீலனை செய்வோம் என அவர் கூறியுள்ளார்.