சாவகச்சேரியில் வர்த்தகருக்கு 62 ஆயிரம் ரூபாய் தண்டம்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த வர்த்தகருக்கு 62 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 20ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் , வர்த்தக நிலையம் ஒன்றில் விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த காலாவதியான பிஸ்கட் , சோடா மற்றும் பழுதடைந்த கடலை பைகள் என்பன மீட்கப்பட்டன.
அதனை அடுத்து குறித்த வர்த்தகருக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
அதன் போது மன்றில் முன்னிலையான வர்த்தகர் விசாரணைகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த மன்று , அவருக்கு 62 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.