”ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும்” கனடா பிரதமரின் கருத்துக்கு கடும் விமர்சனம்
கனடா பிரதமர், தவறுதலாக போரில் ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும் கூறிய ஓற்றை வார்த்தையால் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.
அண்மையில், இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் உக்ரைனுக்கு கனடா வழங்கிய உதவிகள் குறித்து ஜஸ்டின் ட்ரூடோவிடம் வினவப்பட்டது.
இதன் போது உக்ரைனுக்கு கனடா வழங்கிய நிதியுதவி, பொருளுதவி உட்பட ஆயுத உதவிவரை அனைத்தையும் விவரித்த ட்ரூடோ ஈற்றில் போரில் ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும் என தவறுதலாக கூறிவிட்டார்.
உக்ரைன் வெற்றி
பின்னர் உடனடியாக மன்னிப்புக்கோரி போரில் உக்ரைன் தான் வெற்றி பெற வேண்டும் என கூறியிருந்த போதும் அவர் முதலில் கூறிய வார்த்தைகளால் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.
அவரை இணையவாசிகள் கடுமையாக கேலி செய்துவரும் நிலையில், இவர்தான் ஜோ பைடனின் இன்னோர் சாயல் அவரைப்போலவே மறந்து பேசுகிறார் என்று என ஒருவர் விமர்சித்துள்ளார்.
பரவலாக பகிரப்பட்டு வருகின்றது
இதேபோல இன்னொருவரும், ட்ரூடோ தனது மனதிலுள்ள விருப்பத்தை வெளியே வெளிப்படையாக கூறிவிட்டார் என்றும் சமூக வலைத்தளங்களில் காணொளியை பகிர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ட்ரூடோ, போரில் ரஷ்யா வெற்றி பெற்றேயாக வேண்டும், மன்னிக்கவும், ரஷ்யாவுக்கெதிரான போரில் உக்ரைன் வெற்றி பெற்றேயாகவேண்டும் என்று கூறும் காட்சிகள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.