குழந்தைகள் பிறப்புவீதம் தொடர்பான வெளியான அதிர்ச்சி தகவல்
கடந்த ஐந்து வருடங்களில் களுத்துறை மாவட்டத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2983 ஆக குறைந்துள்ளதாக களுத்துறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தாய் மற்றும் குழந்தைகள் நல சுகாதார வைத்திய அதிகாரி சுனேத் சிறி சுதர்ஷன தெரிவித்தார்.
2019ல் 1000க்கு 13 ஆக இருந்த பிறப்பு விகிதம் 2023ல் 1000க்கு 9.8 ஆக குறைந்துள்ளது என்றார்.
புள்ளிவிபரங்கள்
2019ல் 11617 குழந்தைகளும், 2020ல் 11124 குழந்தைகளும், 2021ல் 10787 குழந்தைகளும், 2022ல் 9815 குழந்தைகளும், 2023ல் 8634 குழந்தைகளும் பிறந்துள்ளனர்.
களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுமல் நந்தசேனவின் ஆலோசனையின் பேரில் விசேட கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனை நிவர்த்தி செய்யும் வகையில் சுகாதார சேவை அலுவலக மட்டத்தில் தொடர் விசேட வேலைத்திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சுதர்சன மேலும் தெரிவித்தார்.