அபாயம்.. இனி கங்கை புனித நதியில் நீராட வேண்டாம் – அதிர்ச்சி!
கங்கை நீரில் பொதுமக்கள் யாரும் நீராட வேண்டாம் என பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.
புனித நதி
இந்து மதத்தினர்கள் மிக புனிதமாக கருதும் விஷயங்களில் கங்கை நதியும் ஒன்று. நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களும், வாழ்வில் ஒரு முறையாவது கங்கையில் நீராட ஆசை இருக்கும்.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் பல கோடி மக்கள் நதியில் நீராடி வருகிறார்கள். கங்கையில் நீராடினால் பாவங்கள் கழியும், என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
தற்போது அந்த வாக்கியம் பொய்யாகும் வகையில், கங்கை நதி நீராட உகந்தது இல்லை என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த கருத்தை கூறியுள்ளது.
எச்சரிக்கை
கங்கையின் மாசுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மேற்கு வங்க அரசு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து இருந்தது. அதை ஆய்வு செய்த தீர்ப்பாயம் பல திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.
வடக்கு 24 பர்கானாஸ், முர்ஷிதாபாத், நாடியா, மால்டா, ஹூக்ளி, புர்பா பர்த்வான், ஹவுரா, பர்பா மேதினிபூர் ஆகிய மாவட்டங்களை ஆய்வு செய்ததில் கங்கை நதியின் நிலை மோசமாக உள்ளது. குறிப்பாக 24 பர்கானாஸ்,பூர்பா மேதினிபூர் போன்ற சில மாவட்டங்களில் போதுமான கழிவுநீர் சுத்திகரிப்பு இல்லை.
கங்கை நீரில் மலக் கோலிஃபார்ம் என்ற பாக்டீரியாவின் அளவு அதிகமாக இருப்பதால், மேற்கு வங்கத்தில் உள்ள நதி முழுவதும் குளிப்பதற்குத் தகுதியற்றதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், புனித நீரான கங்கையைக் காக்க தவறியதே இதற்கு காரணம் என்றும் நீரில் கலக்கப்படும் கழிவு நீரைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் மேற்கு வங்க அதிகாரிகளுக்குத் பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.