வன்னியில் காய்த்துக் குலுங்கும் கார்த்திகைச் செடி
வன்னியின் பல பகுதிகளிலும் கார்த்திகை செடிகள் காய்த்திருப்பதனை அவதானிக்கலாம்.
இங்கு காய்கள் முற்றி பழுத்து வெடித்து விதை பரப்புவதையும் பார்க்க முடிகின்றது.
காடுகளிடையே வளர்ந்து கொடி பரப்பியுள்ள இவை ஆரோக்கியமான காய்களை காய்த்திருப்பதாக பலரும் அவற்றை பார்த்து கருத்துரைக்கின்றனர்.
கார்த்திகை காய்க்குமா
கார்த்திகை காய்க்குமா? என கேள்வி எழும்பும் பலரும் இவர்களிடையே இருப்பதனையும் குறிப்பிட வேண்டும்.
கார்த்திகை நிலக்கீழ் செடியாகும். பசுமையான நிலங்களில் தான் அவை நன்கு வளர்ச்சியடையும். அழகிய பூக்களை தந்த அவை நன்றாகவே காய்க்கின்றதனையும் அவதானிக்க முடியும்.
தங்கள் விவசாய நிலங்களின் வேலிகளில் இவற்றை ஒவ்வொரு வருடமும் நிலம் ஈரமாகும் போது அவதானிக்க முடிகின்றது என விவசாயிகள் பலரும் குறிப்பிட்டமையும் நோக்கத்தக்கது.
கூழாமுறிப்பு B பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மாங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் இப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.