ரிஷாத் தரப்புக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷரபின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கானது இன்று(29.02.2024) விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி
எனினும் கோட்டாபய அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 20ம் திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியிருந்தார்.
அதனையடுத்து முஷர்ரப்பின் கட்சி அங்கத்துவம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட நிலையில், அதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷா்ரப் வழக்கொன்றைத் தொடுத்திருந்தார்.
இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்து முஷாரப் எம்.பி நீக்கப்பட்ட முறைமை தவறானதென தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்கவும் மறுப்புத் தெரிவித்துள்ளது.