அமெரிக்காவுடன் இலங்கை அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தம்
சிறப்பு அணுசக்தி பொருட்கள் மற்றும் பிற கதிரியக்கப் பொருட்களின் சட்டவிரோத கடத்தலைக் கண்டறிந்து தடுக்க அமெரிக்காவுடன் இலங்கை அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து அதிகரித்து வரும் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிறப்பு அணுசக்தி பொருட்கள் மற்றும் பிற கதிரியக்கப் பொருட்களின் சட்டவிரோத கடத்தலைக் கண்டறிந்து தடுக்க அமெரிக்காவுடன் இலங்கை அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அமெரிக்க தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்துடன் இலங்கை கடற்படை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கடந்த புதன்கிழமை கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் கையெழுத்திட்டது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக வியாழக்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதில் அமெரிக்க-இலங்கை கூட்டு எப்போதும் வளர்ந்து வருகிறது” என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கை கடற்படைக்கும் அமெரிக்க எரிசக்தித் துறையின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்திற்கும் இடையிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் “அணு மற்றும் கதிரியக்கப் பொருட்களில் சட்டவிரோத கடல் கடத்தலைத் தடுப்பதற்கான எங்கள் கூட்டு முயற்சிகளுக்கு வலு சேர்க்கும்” என்று ஜூலி சுங் பதிவிட்டுள்ளார்.
இலங்கையின் எல்லையைக் கடக்கும் கட்டுப்பாட்டுப் புள்ளிகளில் கண்டறிதல் மற்றும் அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்ப அமைப்புகளை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் உள்ளிட்ட தொழில்நுட்ப மற்றும் வழிமுறை ஒத்துழைப்பு மூலம் சிறப்பு அணுசக்தி பொருட்கள் மற்றும் பிற கதிரியக்கப் பொருட்களின் சட்டவிரோத கடத்தலைக் கண்டறிந்து தடுக்கும் இருதரப்பு ஒத்துழைப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எடுத்துரைத்தது என ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.