பாடசாலை மாணவர்களுக்கிடையேயான முயற்சியாண்மை ஊக்குவிப்பு நிகழ்வு
யாழ்ப்பாண மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் பாடசாலை மாணவர்களுக்கிடையேயான முயற்சியாண்மை ஊக்குவிப்பு செயற்திட்டத்தில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தி.தனஞ்சயன் அவர்களின் தலைமையில் நேற்று (29.02.2024) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இச் செயற்திட்டம் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் மாணவர்களிடையே முயற்சியாண்மையை ஊக்குவிக்கும் முகமாக இடம்பெறுகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்திலும் இச் செயற்திட்டத்தினை மையப்படுத்தி மாணவர்களிடையே சித்திரம் வரைதல், கட்டுரை எழுதுதல் போட்டிகள் நடாத்தப்பட்டதோடு, வெற்றியீட்டிய மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.
மேலும் இந் நிகழ்வில் இலங்கை வங்கியின் வட மாகாண உதவி பொது முகாமையாளர் சிவானந்தம், மாவட்ட மற்றும் பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.