இஸ்ரேலின் மிக கொடூரமான செயல்… கடுமையாக விமர்சிக்கும் நாடு!
உணவு பொருட்களுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு செளதி அரேபியா, எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகளைத் தொடர்ந்து துருக்கியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதலில் 100-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் 700 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் இந்த செயலை மனிதத்துக்கு எதிரான மற்றொரு குற்றம் இது என துருக்கி விமர்சித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை பிற்பகுதியில் வெளியிட்ட குறிப்பில், பட்டினியை ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாகவும் அண்மைய தாக்குதல் பாலஸ்தீன இனத்தை அழிக்கும் இஸ்ரேலின் உள்நோக்கத்தைக் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளது.
பிராந்திய எல்லைத் தாண்டிய பின்விளைவுகளை உருவாக்கும் பேரழிவை இஸ்ரேல் காசாவில் மேற்கொண்டு வருவதாகவும் இதனை நிறுத்த உலக நாடுகளுக்கு துருக்கி அழைப்பு விடுத்துள்ளது.