அமெரிக்கா முதல் பூடான் வரை… ஜாம் நகரில் வந்து சென்ற 200 சர்வதேச விமானங்கள்
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தையொட்டி, ஜாம் நகர் விமான நிலையத்திற்கு சுமார் 200 சர்வதேச விமானங்கள் வந்து சென்றுள்ளன. இப்படியொரு நிகழ்வு இதற்கு முன்பு நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று முதல் வரும் மார்ச் 3 ஆம் தேதி வரை இவர்களது ப்ரீ வெட்டிங் நடைபெற உள்ளது.
படையெடுக்கும் பிரபலங்கள்!

இதன் காராணமாக குஜராத்தின் ஜாம் நகர் பகுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1.000 ஏக்கர் பரப்பளவில் காடு, புனரமைக்கப்பட்ட சாலைகள், சுமார் 2,500 உணவு வகைகள் என கோலகாலமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், மெட்டா சிஇஓ மார்க் ஸக்கர்பெர்க், பிளாக்ராக் சிஇஓ லாரி ஃபிங்க், பிளாக்ஸ்டோன் தலைவர் ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன், டிஸ்னி சிஇஓ பாப் இகர், டிரம்ப்பின் மகள் இவாங்கா, அடோப் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண், பூட்டான் மன்னர், ராணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
இதற்காக, அமெரிக்காவின் நியூயார்க், லாஸ் ஏஞ்செல்ஸ், லண்டன், சியோல், கத்தார், பூடான் ஐக்கிய அரபு அமீரகம், பாரிஸ், இத்தாலி உள்ளிட்ட நகரங்கள், நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் ஜாம் நகருக்கு வருவதும் போவதுமாக உள்ளது. போயிங், ஏர்பஸ், எம்ப்ரேயர், பால்கோன்ஸ், கல்ஃப் ஸ்ட்ரீம்ஸ், லியர்ஜெட், லெகஸி, பெனோம், ஹாக்கர்ஸ், சிடாஷன்ஸ் உள்ளிட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில் ஜாம் நகருக்கு சுமார் 200 சர்வதேச விமானங்கள் நேற்று வந்து சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியொரு நிகழ்வு இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை என்று விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஷாருக்கான், சல்மான் கான், ஜான்வி கபூர், மனுஷி சில்லர், ராணி முகர்ஜி மற்றும் மனிஷ் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் ஜாம்நகருக்கு வருகை புரிந்துள்ளனர். அதுமட்டுமன்றி நேற்றுமுன் தினம் (29.02.2024) இரவு ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆலியா பட், ரன்பீர் கபூர், அட்லீ உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.