இஸ்ரேலுக்கு ஆதரவு… ஜேர்மனிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடிய மத்திய அமெரிக்க நாடு
இஸ்ரேலுக்கு நிதி மற்றும் இராணுவ உதவிகளை வழங்கியதற்காகவும், ஐ.நா. பாலஸ்தீனிய அகதிகள் முகமைக்கு நிதியுதவி அளிக்க மறுப்பதாகவும் குறிப்பிட்டு ஜேர்மணிக்கு எதிராக மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இராணுவ உதவியை நிறுத்த
அத்துடன், இஸ்ரேலுக்கு ஜேர்மனி அளிக்கும் இராணுவ உதவியை நிறுத்த அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நிகரகுவா சர்வதேச நீதிமன்றத்தை கோரியுள்ளது.
1948 இனப்படுகொலை ஒப்பந்தம் மற்றும் 1949 போர் சட்டங்கள் மீதான ஜெனீவா ஒப்பந்தம் ஆகியவற்றை ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களுக்கு எதிராக ஜேர்மனி மீறுகிறது என்றே நிகரகுவா குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ததாகக் கூறப்படும் இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா கொண்டு வந்த வழக்கை இது பலப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இனப்படுகொலைக்கு உடந்தை
கடந்த மாதம் சர்வதேச நீதிமன்றம் தெரிவிக்கையில், தென்னாப்பிரிக்கா குறிப்பிட்டுள்ளது போன்று இஸ்ரேல் இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறியுள்ளது என்றும், காஸாவில் அப்படியான நடவடிக்கை ஏதேனும் முன்னெடுப்பதை தடுப்பது உள்ளிட்ட அவசர நடவடிக்கைகளுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இனப்படுகொலை ஒப்பந்தமானது, நாடுகள் இனப்படுகொலை முன்னெடுப்பதில் இருந்து தடுப்பது மட்டுமல்ல, அவ்வாறு நடக்கும் என்றால் தண்டிக்கவும் வாய்ப்புள்ளது.
இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பது மற்றும் இனப்படுகொலைக்கு முயற்சிப்பது ஒப்பந்தத்தை மீறுவதாகவும் கருதப்படும். அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேலுக்கு மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.