எலான் மஸ்க் ஓபன் ஏஐ மீது கொண்டு வரும் சர்ச்சை
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏஐ மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஒப்பந்த மீறல், நம்பிக்கைக்குரிய கடமையிலிருந்து நழுவுதல் மற்றும் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து இலாபத்தை அதிகரிக்க பாகுபாடான வணிக நடவடிக்கைகளில் ஓபன்ஏஐ ஈடுபட்டு வருவதாக எலான் வழக்கு ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஓபன் ஏஐ உருவாக்கப்பட்ட நோக்கத்துக்கு மாறான பாதையில் தற்போது பயணிப்பதாக எலான், தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
ஓபன்ஏஐ கடந்த ஆண்டு வெளியிட்ட சாட் ஜிபிடி பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதன் 3.5-வது வெர்சன் வரை பயனர்களுக்கு இலவச சேவையை அனுமதித்த ஓபன்ஏஐ சாட் ஜிபிடி-4 வெர்சனுக்கு கட்டணம் வசூலித்து வருகிறது.
இந்தியாவில் தற்போதைக்கு 1,650 பேர் கட்டணச் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் மற்றுமொரு கதையும் குறிப்பிடப்படுகிறது.
எலான் மஸ்க் ஓபன்ஏஐ நிறுவனத்தை டெஸ்லாவுடன் இணைக்க முயன்றதாகவும் ஆல்ட்மேன் உள்பட நிர்வாக குழு உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் பிறகே ஆல்ட்மேன் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.