;
Athirady Tamil News

அமெரிக்காவில் இந்திய “டான்சர்” படுகொலை – மோடியிடம் கெஞ்சும் நடிகை..!

0

அமெரிக்காவில் பிரபல நடன கலைஞரான அமர்நாத் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

படுகொலை
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெரிதளவில் தலைதூக்கி இருக்கும் சூழலில், தற்போது இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடன கலைஞரான அமர்நாத் கோஸ் அமெரிக்காவின் மசூரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் பகுதியில் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் படு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அவரது நண்பரும் நடிகையுமான தெவோலீனா பட்டாச்சார்ஜி எக்ஸ் தளபதிவில் நாட்டின் பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

குறைந்தபட்சம்…
அவர் வெளியிட்டுள்ள பதிவின் தமிழாக்கம் வருமாறு, எனது நண்பர் அமர்நாத்கோஷ் செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் அகாடமியில் சுட்டுக் கொல்லப்பட்டார். குடும்பத்தில் ஒரே குழந்தை, தாய் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சிறுவயதில் தந்தை இறந்துவிட்டார்.

காரணம் , குற்றம் சாட்டப்பட்ட விவரங்கள் எல்லாம் இன்னும் வெளிவரவில்லை அல்லது அவருடைய சில நண்பர்களைத் தவிர அவரது குடும்பத்தில் யாரும் அதற்காக போராடவில்லை.

அவர் கொல்கத்தாவை சேர்ந்தவர். சிறந்த நடனக் கலைஞர், PHD படித்துக்கொண்டிருந்தார், மாலை நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார், திடீரென்று அவர் தெரியாத ஒருவரால் பலமுறை சுடப்பட்டார்.

அமெரிக்காவில் உள்ள சில நண்பர்கள் உடலைப் பெற முயற்சித்து வருகின்றனர், ஆனால் இன்னும் அதைப் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. இந்திய தூதுரகம் உங்களால் முடிந்தால் தயவுசெய்து பாருங்கள். குறைந்தபட்சம் அவர் கொலைக்கான காரணத்தையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என பதிவிட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் மற்றும் பிரதமர் மோடியை அவர் டேக் செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.