கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருக்கும் சாந்தனின் ஊர்தி பவனி நெல்லியடி பேருந்து நிலையத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் பெருமளவிலான மக்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சாந்தனின் ஊர்தி பவனி வல்வெட்டித்துறை – தீருவில் நோக்கி பொதுமக்களின் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படவுள்ளதுடன் மாலை 05 மணி அல்லது 06 மணியளவில் சாந்தனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருக்கும் சாந்தனின் ஊர்தி பவனிக்கு கொடிகாமத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது கிளிநொச்சியில் பெருமளவிலான மக்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சாந்தனுக்கு கிளிநொச்சியில் பெருமளவிலான மக்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
கிளிநொச்சி நகர டீப்போ சந்தியில் கறுப்புக் கொடிகள் கட்டி பந்தல்கள் அமைக்கப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் அரசியில் பிரமுகர்கள் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு உணர்வுபூர்வ அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.
சிவஞானம் சிறிதரன் அஞ்சலி
வவுனியாவில் இருந்து ஏ-09 வீதி வழியாக எடுத்து வரப்பட்ட சாந்தனின் ஊர்தி 03.03.2024, ஞாயிற்றுக்கிழமை மு.ப 11.00 மணிக்கு, கிளிநொச்சி டிப்போச்சந்திக்கு அருகில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சாந்தனின் பூதவுடலுக்கு வவுனியா உள்ளிட்ட தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
சாந்தனின் ஊர்திக்கு மாங்குளத்தில் மக்கள் அஞ்சலி கிளிநொச்சி நோக்கி தொடர்ந்து பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இன்று யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்லப்படுகின்றது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும்,பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு மாங்குளத்திலும், காலை 10.30 இற்கு கிளிநொச்சியிலும் தொடர்ந்து 11.30 இற்கு இத்தாவில் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,கொடிகாமம் ஊடாக பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு பிற்பகல் 2 மணிமுதல் வல்வெட்டித்துறை தீருவிலில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.