காளானில் இருந்து தங்கம்! இந்தியா படைத்த சாதனை
காட்டு வகை காளான்களில் இருந்து தொகுக்கப்பட்ட தங்க நானோ துகள்களின் ஆதாரங்களை (Gold Nanoparticles) கோவாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
டாக்டர் சுஜாதா டபோல்கர் (Dr. Sujata Dabolkar) மற்றும் டாக்டர் நந்தகுமார் கமத் (Dr. Nandkumar Kamat) ஆகிய இரு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர்.
இரண்டு ஆராய்ச்சியாளர்களும் தங்க நானோ துகள்களை உருவாக்க ‘ரோன் ஓல்மி’ என்றும் அழைக்கப்படும் டெர்மிடோமைசஸ் இனத்தின் காளான்களை ஆய்வு செய்துள்ளனர்.
காளான் மூலம் தங்கம்
டெர்மிடோமைசஸ் ஹெய்மி பெல்லட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் AuNP களின் உயிரியக்கவியல் மற்றும் குணாதிசயம் என்ற தலைப்பில், டெய்லர் மற்றும் பிரான்சிஸ் ஆகியோரால் புவி நுண்ணுயிரியல் இதழில் சமீபத்தில் இந்த ஆராய்ச்சி வெளியிடப்பட்டது.
மேலும், இந்த முறை, பாரம்பரிய முறைகளை விட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது. இவை, புற்றுநோய் சிகிச்சை, மருந்து விநியோகம், சூரிய மின்கலங்கள், மற்றும் நீர் சுத்திகரிப்பு போன்ற பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட காளான் , “ரோன் ஓம்லி” (Roen Olmi) என அழைக்கப்படுவதோடு இது, டெர்மிடோமைசெஸ் (Termitomyces) என்ற காளான் குடும்பத்தைச் சேர்ந்தது.
ரோன் ஓம்லி காளான்
இந்த காளான்கள் மழைக்காலங்களில் கிடைப்பதோடு கோவாவில் மிகவும் பிரபலமான உணவுப் பொருளாகவும் காணப்படுகின்றது. இந்த ஆய்வின் மூலம், கோவாவில் காணப்படும் காளான் வகைகளின் மருத்துவ மற்றும் தொழில்துறை முக்கியத்துவம் மேலும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழில்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும் வகையில், நகோயா நெறிமுறையின்படி, இந்த வளங்களைப் பாதுகாப்பதன் மற்றும் பொறுப்புடன் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.