;
Athirady Tamil News

போர் நிறுத்தம் நிறுத்தம் தொடர்பில் ஹமாஸ் மூத்த அதிகாரி கூறிய அந்த விடயம்

0

இடம்பெயரச் செய்யப்பட்ட பலஸ்தீனியர்கள் வடக்கு காசாவிற்கு திரும்புவது மற்றும் மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பது என்பன உள்ளிட்ட தங்களின் நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டால் போர் நிறுத்தம் சாத்தியமென்று ஹமாஸ் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்த நிலையில் 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம்
எனினும், போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலியாக சிலர் விடுவிக்கப்பட்டமையால் ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதனால், பலஸ்தீனர்களில் மொத்தம் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்ததுடன் மேலும் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் காயமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் தொடரும்
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றி கிடைக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்தமையினால் எகிப்திய எல்லையையொட்டிய தெற்கு பகுதியில் அமைந்த ரபா நகரை நோக்கி செல்ல திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் தங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் காசா போர் நிறுத்தம் சாத்தியமே என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.